jothdam

மேஷ ராசி: மேஷ ராசி நண்பர்களே குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியமான விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் அனுசரித்து நடக்க வேண்டும். அதிஷ்ட திசை: தெற்கு அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம் :சிவப்பு நிறம் நட்சத்திர பலன்கள்: அஸ்வினி :மகிழ்ச்சியான நாள்். பரணி :ஆதரவு கிடைக்கும். கிருத்திகை :கவனம் வேண்டும். ரிஷப ராசி: ரிஷி ப ராசி நண்பர்களே கடன் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதற்குண்டான உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைப்பட்டுவந்த தனவரவுகள் திருப்திகரமாக கிடைக்க வாய்ப்பு அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும. உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மூலம் நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். அதிஷ்ட திசை :மேற்கு அதிஷ்ட எண் :6 அதிஷ்ட நிறம்: வெள்ளை நட்சத்திரம் பலன்கள்: ரோகிணி :உதவி கிடைக்கும். மிருகசீரிஷம் :விவாதங்களை தவிர்க்கவும் . கிருத்திகை: சிந்தனைகள் மேம்படும். மிதுன ராசி: மிதுனராசிகார்களே மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உடன் இருப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றியும் உலக வாழ்க்கை பற்றியும் புரிதல் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இதுவரை இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும் நாள். அதிஷ்ட திசை: வடக்கு அதிஷ்ட எண் :2 அதிஷ்ட நிறம்: பச்சை நிறம் நட்சத்திர பலன் : மிருகசீரிஷம்: குழப்பங்கள் நீங்கும். திருவாதிரை :வாய்ப்புகள் உண்டாகும். புனர்பூசம் :கருத்து வேறுபாடுகள் குறையும். கடக ராசி: கடகராசிகார்களே குடும்ப பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகம் ஏற்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றங்கள் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளும் தனவரவுகளும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்ட: திசை மேற்கு அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறம் :மஞ்சள் நிறம் நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்: ஆதரவு கிடைக்கும். பூசம் :லாபம் ஏற்படும் . ஆயில்யம்: அபிவிருத்தி நாள். சிம்ம ராசி : சிம்மராசிகார்களே தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும் .உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். தரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப்பணிகள் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முக்கியமான விஷயங்களுக்கு முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிஷ்ட திசை :வடக்கு அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் அதிர்ஷ்ட எண்: 7 நட்சத்திரம் பலன்கள் : மகம் :முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பூரம்: முன்னேற்றமான நாள்.உத்திரம்: வாய்ப்புகள் உண்டாகும். கன்னி ராசி : கன்னிராசிகார்களே உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் .வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் அறச்செயல்கள் அதிகம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் குறைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட திசை தென் கிழக்கு அதிர்ஷ்ட எண் :5 அதிர்ஷ்ட நிறம் :நீல நிறம் நட்சத்திர பலன் : : உத்திரம் :பொறுமை வேண்டும். அஸ்தம் :அலைச்சல்கள் அதிகரிக்கும் . சித்திரை :காலதாமதம் உண்டாகும். துலாம் ராசி : துலாம் ராசிகார்களே கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் ..நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள். கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள் .மற்றவர்களின் கருத்துக்களை இலக்குகளில் தடுமாற்றம் ஏற்படக்கூடும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் . அதிர்ஷ்ட திசை: வட கிழக்கு அதிஷ்ட எண் :9 அதிஷ்ட நிறம் :ஊதா நிறம் நட்சத்திர பலன்கள்: சித்திரை: ஆர்வம் அதிகரிக்கும். சுவாதி :கவனம் வேண்டும். விசாகம் :சிந்தித்து செயல்படவும். விருச்சிக ராசி: விருச்சிக ராசி கார்களே தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும் .வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் மகிழ்ச்சியான செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள் .உத்தியோகம் தொடர்பான பணிகளை சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நாள் இன்று .நண்பர்களுடன் பொழுது போக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை: தென் கிழக்கு அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிரவுன் நிறம் நட்சத்திர பலன்கள்: விசாகம் வாய்ப்புகள் கிடைக்கும். அனுஷம் ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை மகிழ்ச்சியான நாள். தனுசு ராசி: . தனுசு ராசி காரர்களே மனதில் புதுவிதமான ஆசைகளும் எண்ணங்களும் அதிகரிக்கக்கூடிய நாள். இன்று சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக மனதில் உறுதி கொண்டு இருந்த பிரச்சினைகள் இன்று தீர்வு வரும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள் . அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட திசை: மேற்கு நட்சத்திர பலன்கள்: மூலம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பூராடம் :சேமிப்புகள் அதிகரிக்கும்். உத்திராடம் :பரிசுகளைப் பெறுவீர்கள். மகரம் ராசி : மகர ராசி கார்களே தொழில் சார்ந்த கருவிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும் நாள். இன்று வாகனம் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு கிட்டும் சாமர்த்தியமாக செயல்பட்டு மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். அதிஷ்ட திசை வடக்கு அதிர்ஷ்ட எண் 9 அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிறம் நட்சத்திர பலன்கள் : உத்திராடம் :லாபம் அதிகரிக்கும். திருவோணம் :ஒற்றுமை ஏற்படும். அவிட்டம்: தீர்வு கிடைக்கும். கும்பம் ராசி உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும் எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உங்களின் மீது சிறுசிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும் மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிர்பார்த்து சில காரியங்களை எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் மன அமைதி ஏற்படும் . அதிஷ்ட திசை கிழக்கு அதிஷ்ட எண் 3 அதிஷ்ட நிறங்கள் நட்சத்திர பலன்கள் : சதயம்: முன்னேற்றம் ஏற்படும் பூரட்டாதி மன அமைதி உண்டாகும் . மீனம் ராசி : மீனராசிகார்களே மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் .கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படக்கூடிய இன்று. நெருக்கமானவர்களின் ஆதரவின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களின் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும் புதிய செயல் திட்டங்களை அமைத்து அதை செயல்படுவீர் . அதிர்ஷ்ட திசை: தென் கிழக்கு அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நட்சத்திர பலன்கள் : பூரட்டாதி தன்னம்பிக்கை அதிகரிக்கும் . உத்திரட்டாதி மாற்றங்கள் உண்டாகும். ரேவதி இன்னல்கள் குறையும்.
Newest
Previous
Next Post »