தேவியின் திருநாமங்கள்
பத்ரம் என்றால் மங்களம் என்பது பொருள். பக்தர்களுக்கு என்றும் மங்களத்தையே அளிப்பவள் ஆதலால் சக்திக்கு பத்ரகாளி என்ற பெயர் அமைந்தது பொருத்தமான ஒன்றாகத்தான் இருந்தது. பத்ரகாளியம்மனே ப்ரத்யங்கிரா தேவியும் அவள்.
ப்ரத்யங்கிராஸ், அங்கிராஸ் என்ற இரு ரிஷிகளும் காளியின் மந்திரத்தை முதன்முதலில் ஜெபித்தால் அவர்களின் பெருமை உணர்த்தும் வண்ணம் அந்த இருவரது பெயரையும் இணைத்து பிரித்தியங்கரா தேவி என அழைக்கப்படுகிறார்கள்.
குரோதத்தில் இருந்து தோன்றியவள் ஆதலால் என்றும் குரோத சம்ப வாயா என்றும் கோபத்தை நாசம் செய்பவள் ஆகையால் க்ரோத சமனீ என்றும் பெரும் உக்கிரம் கொண்ட கொண்ட ஆதலால் அகிரா என்றும் இன் தேவிக்கு பெயர்களுண்டு பிரியங்கா தேவியின் தன் அருள்புரியும் தன்மை காரணமாக வேறு பல பெயர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
ஓங்கார ரூபிணியாக இருந்து விஸ்வரூபத்தில் திகழ்ந்து புத்தியையும் முக்தியையும் அளிப்பதால் புக்தி முக்தி ஃபல ப்ரதாய என்றும் அழைப்பார்கள். சகல ஐஸ்வர்யங்களையும் உடையவள் என்பதால் சகல ஐஸ்வரியதாரிண்யை என்றும் அழைக்கப்படுகிறார்கள். பக்தர்களை நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து காப்பதால் நவகிரக ரூபினி என்றும் அழைப்பார்கள். ஒன்பது வருடங்களாக பிரிக்கப்பட்ட 48 ரிக் மந்திரங்கள் இவள் பெருமையை உணர்த்துவதால இவளை அதர்வண பத்ரகாளி என்றும் கூறுவார்கள் .
ஸ்ரீ சரபேஸ்வரர் தோற்றம்
ஒரு சமயம் ஹிரண்ய கசிபு எனும் அரக்கனின் செயல் அத்துமீறிய சமயம் மனித உடலையும் சிங்கத்தின் தலையையும் கூடிய உருவ ஏற்று ஆக்ரோஷம் கொண்டு இரண்யகசிபுவை தன் மடி மீது கிடத்தி மார்பினை பிளந்து குடலை உருவி மாலையாக அணிந்த தோடு அவன் உடலில் இருந்த உதிரம் அனைத்தையும் குடித்ததால் ரஜோகுணம் மேலிட சினம் தணியாது பெரும் உக்கிரமடைந்து உலகத்திலேயே பயமடைய செய்தார்கள் அஞ்சி நடுங்கிய தேவர்கள் கோபத்தை தணிக்கும் படி நரசிம்ம மூர்த்தியை பிரார்த்திக்க அவர்களின் பிரார்த்தனையால் உற்சாகமடைந்த நரசிம்மர் , மேலும் உக்கிரம் கொண்டார் பயந்து போன தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட நரசிம்மரின் உக்கிரத்தை தன்னால் தணிக்க முடியாது. என்று உணர்ந்த இந்திரன் அனைவரையும் அழைத்துக்கொண்டு படைப்பின் அதிபதியாகிய பிரம்மனிடம் சென்று வேண்டினார்கள். ஆனால் அவரும் இக்கோர உருவம் கொண்ட நரசிம்ம மூர்த்தியை என்னால் நெருங்கக் கூட முடியாது ,என்று அவர் கூறிவிட்டார். அதன்பின்பு தேவர்கள் நரசிம்மாவதாரம் நிகழக் காரணமாக இருந்த பிரகஹலா தான் இடம் சென்று நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தி அருளும்படி வேண்டினார்கள். பிரஹலாதன் நரசிம்மரின் சினம் தணியும் மாறு வேண்ட அவனைத் தன் மடிமீது இருத்தி ஆலிங்கனம் செய்து மகிழ்ந்தார் .இருப்பினும் அவரது உக்கிரம் குறையவில்லை. மன பயம் அதிகமான தேவர்கள் விநாயகரை நோக்கித் துதிக்க அவர்கள் முன்னால் தோன்றினால் கஜநாயகன் தேவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற எண்ணிய விநாயகர் தன் வாகனத்தின் மீது ஏறி நரசிம்மமூர்த்தி அடைந்து பல விகடங்கள் செய்து காட்டினார் ஆயினும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை .அவர் முகத்தில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது முடிவில் தேவர்களின் துயர் துடைக்கும் தொழில்புரியும் விஷ்ணு ,பிரம்மா ருத்ரன் ஆகியோரை ஆட்சிசெய்யும் பரம்பொருளாகிய பரமனிடம் சென்று முறையிட நரசிம்மரின் கோபத்தை தணிக்க வீரபத்திரரை அனுப்பி வைத்தார். சிவபெருமான் நரசிம்மரை அடைந்து சினம் தணிந்த உருவத்தை மாற்றி அருளும்படி வேண்டி நின்றார் .அப்போதும் கோபம் தணியாத நரசிம்மர் வீரபத்திரரை தமது கூரிய நகங்களால் இம்சிக்கலானார். மனம் வருந்திய வீரபத்திரர் சிவனை நோக்கித் ஆயிரம் கோடி சூரியனைப் போன்ற ஒளியுடன் உலகில் நடுங்கும் வண்ணம் ஓங்கார ஓசை எழுப்பியவாறு பாதி உருவம் பயங்கர காளியாகவும் மறு பாதி உருவம் இரு இறக்கைகள் ஓடக்கூடிய பயங்கர பக்ஷி போன்ற உருவம் கொண்டும் சரபேஸ்வரர் சிவபெருமான் தோன்றினார். சரபேஸ்வரர் ஆகாயத்தில் பறந்து தன் இரு கைகளையும் விசிறி போல அசைத்தார் அப்போது இளம் காற்று எழுந்தது. அதனால் நரசிம்மரின் கோபம் அடங்கியது. என்றாலும் போரை தொடரும் விருப்பம் முற்றிலும் குறையாததால் நரசிம்மர் தன் மேனியிலிருந்து கண்ட பேருண்டம் என்னும் சக்தியை தோற்றுவித்தார் .அது மேலே பறந்து சென்று சரப பக்ஷியுடன் மோதியது ,அந்தப் போர் 18 நாட்கள் நீடித்தது இது தொடர்வதை விரும்பாத சரபேஸ்வரர் போரை நிறுத்த திருவுளம் கொண்டார்.
பிரித்திங்கரா தேவி வெளிப்படுதல்:
சரபேஸ்வரர் இறக்கைகளில் ஒன்றாக எழுந்தருளியிருந்த பத்ரகாளி பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பின் உக்கிரத்தை தாங்கி உக்கிரப் பிரத்தியங்கிரா தேவியாக வெளிப்பட்டு நரசிம்ம மூர்த்தியின் போர் குணத்தை பிரதிபலிக்கும் பக்க்ஷியை ஜீரணம் செய்தாள். சரபேஸ்வரர் தன் இரு இறக்கைகளும் நரசிம்ம மூர்த்தியை மிருதுவாக அணைக்க நரசிம்மர் சாந்த குணம் மேலிட அவர் ஆனார். தெளிந்த மனதை அடைந்த நரசிம்மர் தன் செயல் நினைத்து வருந்தி சரபேஸ்வரர் உடன் தான் 18 நாட்கள் போர் புரிந்த மையால் அதன் நினைவாக 18 ஸ்லோகங்களால் துதித்தார்.
ஹரியும் ஹரனும் ஒன்றே
ஹரியும் ஹரனும் ஒன்றே பிறகு சரபேஸ்வரர் நரசிம்மரும இரண்டறக் கலந்து தேவர்களை நோக்கி ஜலமும் ஜலமும் பாலும் பாலும் நெய்யும் நெய்யும் எப்படி பிரிக்க முடியாத படி இருக்கிறதோ அப்படியே நாங்களும் உள்ளோம்.
இரணியனை அழித்திட நரசிம்மரும் அவரது கோபத்தை தணிக்க சரபேஸ்வர நாங்கள் தோன்றினோம். இருவருக்கும் வேறுபாடு இல்லை இருவரும் ஒன்றே என்பதை நினைத்து துதியுங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். ராமேஸ்வரத்தில் ராமன் சிவ சிவ என்னும் நாமத்தை உச்சரித்து சிவபூஜை செய்ததாகவும் காசியில் சிவபெருமான் ராமா ராமா என்னும் நாமத்தை உச்சரித்து ராம பூஜை செய்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன ஹரியும் ஹரனும் ஒன்றே எனும் தத்துவத்தை விளக்கவே இறைவன் சரபேஸ்வரர் அவதாரம் புரிந்தார்.
ConversionConversion EmoticonEmoticon